கிரெடிட் ஸ்கோர் என்பது நிதித்துறையில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொல்லாகும். அதிக கிரெடிட் ஸ்கோரைப் பராமரிப்பதன் மூலமாக கடனுக்கான அனுமதியை வேகமாகப் பெறுவதற்கு இது உதவுகிறது. ஏனென்றால், பொதுவாக 700 க்கு மேல் ஸ்கோர் இருந்தால், நீங்கள் நிதி ரீதியாக நிலையானவராக இருக்கிறீர்கள் என்பதைக் குறிக்கிறது, மேலும் இதற்கு ரெகுலராக இருக்கும் வருமானத்திற்கான ஆதாரம் வேண்டும், அதுமட்டுமில்லாமல் நீங்கள் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை அனைத்தையும் சரியான நேரத்தில் செலுத்திய வரலாறும் (ஹிஸ்டரியும்) இருக்க வேண்டும். SMFG இந்தியா கிரெடிட்டுடன் உங்களுக்கான கடன் விண்ணப்பத்தைப் பற்றி முடிவெடுப்பதற்கு இந்த அனைத்து காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன?

கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு தனிநபரின் கடன் தகுதியைக் குறிக்கும் எண்ணாகும். கடன் விண்ணப்பதாரரின் கடன் தகுதியை மதிப்பிடுவதற்கு SMFG இந்தியா கிரெடிட் உட்பட அனைத்து நிதி நிறுவனங்களும் பயன்படுத்தும் அடிப்படை அளவுருக்களில் இதுவும் ஒன்றாகும்.

கிரெடிட் ஸ்கோர் என்பது கிரெடிட் ப்யூரோக்களால் உருவாக்கப்படுகிறது, இவர்கள் RBI ஆல் (ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா) அதிகாரப்பூர்வ கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளாக அங்கீகரிக்கப்படுகிறார்கள். டிரான்ஸ்யூனியன் சிபில் லிமிடெட் (இதற்கு முன்பு கிரெடிட் இன்ஃபர்மேஷன் ப்யூரோ இந்தியா லிமிடெட் என அறியப்பட்டது), என்பது இந்தியாவில் அத்தகைய நம்பகமான மற்றும் முன்னணி கடன் நிறுவனமாகும். இவர்கள் துல்லியமான ஸ்கோர்களை மதிப்பீடு செய்வதில் பெயர் பெற்றவர்கள் மேலும் தனிநபர்கள் மற்றும் வணிகங்களால் செய்யப்பட்ட கடன் விண்ணப்பங்களைச் செயல்படுத்துவதற்கு நிதி நிறுவனங்களுக்கு உதவுகிறார்கள்.

CIBIL ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் என்பது, வருங்காலத்தில் கடன் வாங்குபவர்கள் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நாம் கவனிக்கும் முக்கியமான காரணிகளில் ஒன்றாகும். நல்ல கிரெடிட் ஸ்கோர் என்பது ஒரு தனிநபரின் பொருளாதார நிலைத்தன்மையைக் குறிக்கிறது, இது நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.

இருந்தாலும், சில சமயங்களில், உங்களுடைய கடன் அறிக்கையை சரியாகப் படித்து புரிந்துகொள்வது என்பது எளிதாக இருக்காது. CIBIL அறிக்கைக்கும் ஸ்கோருக்கும் இடையே அதிக வித்தியாசம் உள்ளது. கிரெடிட் அறிக்கை என்பது கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள், மொத்த கடன்களின் எண்ணிக்கை, வேலைவாய்ப்பு விவரங்கள், தகவல் தொடர்பு போன்றவற்றை உள்ளடக்கிய உங்கள் கடன் வரலாற்றின் (ஹிஸ்டரியின்) விரிவான ஆவணமாகும். மறுபுறம், கிரெடிட் ஸ்கோர் என்பது கடன் அறிக்கையின் சுருக்கத்தைக் குறிக்கும் 3 இலக்க எண்ணாகும்.

கிரெடிட் ப்யூரோக்கள் எனப்படும் நிறுவனங்களால் கடன் அறிக்கைகள் உருவாக்கப்படுகின்றன. கடன் வழங்கும் நிறுவனங்கள் பான் கார்டு எண்களின் அடிப்படையில் கடன் வாங்குபவர்களின் தரவை அவர்களுக்கு வழங்குகின்றன, பிறகு இவை ஒவ்வொரு தனிநபருக்கும் / நிறுவனத்திற்கும் கிரெடிட் ஸ்கோர் மற்றும் அறிக்கைகளை உருவாக்குவதற்கு, இந்த நிறுவனங்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

உங்களுடைய CIBIL ஸ்கோரை எவ்வாறு சரிபார்ப்பது?

உங்களுடைய CIBIL ஸ்கோரை இலவசமாகச் சரிபார்ப்பதற்கான சில வழிமுறைகள்:

1. நேரடியாக ப்யூரோ இணையதளத்தில் இருந்து:

பெரும்பாலான கிரெடிட் ப்யூரோக்கள் தனிநபர்களுக்கென்று ஒரு இலவச கிரெடிட் ஸ்கோரை அனுமதிக்கின்றன. உதாரணமாக நீங்கள் உங்களுடைய CIBIL ஸ்கோரை தெரிந்து கொள்ள விரும்பினால், CIBIL இணையதளத்திற்குள் லாக்இன் செய்து இலவச கணக்கை உருவாக்கலாம். பிறகு உங்களுடைய விவரங்களை உள்ளிடவும். உங்களுடைய பான், வாக்காளர் ஐடி, ரேஷன் கார்டு போன்ற சரியான ஐடிக்களின் விபரங்களை உள்ளிடவும். மேலும் இதற்குத் தேவையான எண்களும் தேவை. கணக்கை வெற்றிகரமாக சரிபார்த்த பிறகு, உங்களுடைய CIBIL மதிப்பெண் எவ்வளவு இருக்கிறது என்பதை உங்களால் பார்க்க முடியும்.

அடுத்தது, இந்த ஸ்கோரை அடிப்படையாகக் கொண்டு, கடன் வழங்குபவரைத் தேர்ந்தெடுத்து கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இலவசக் கணக்கு மூலம் கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பதற்கு, பெரும்பாலான ப்யூரோக்கள் ஒருமுறை மட்டுமே அனுமதிக்கின்றன என்பதை நினைவில் கொள்ளவும். ஒரு வருடத்தில் உங்கள் கிரெடிட் ஸ்கோரை பல முறை சரிபார்ப்பதற்கு, உங்களின் பணம் செலுத்தும் கணக்கு உங்களுக்கு உதவும்.

2. உங்களுடைய தற்போதைய வங்கிக் கணக்கிலிருந்து

சில வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் இணையதளங்களில் (நெட் பேங்கிங்) லாகின் பிரிவு அல்லது மொபைல் ஆப் மூலம் வருடத்திற்கு ஒருமுறை இலவசமாக CIBIL ஸ்கோரை தெரிந்து கொள்வதற்கு அனுமதிக்கின்றன. அவர்கள் இந்த வசதியை வழங்குகிறார்களா என்பதைச் சரிபார்ப்பதற்கு, நீங்கள் உங்களுடைய வங்கியைத் தொடர்புகொள்ளலாம் அல்லது அவர்களின் நெட் பேங்கிங்/மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்களில் லாகின் செய்து தெரிந்து கொள்ளலாம்.

3. மூன்றாம் தரப்பு செயலிகள்

சில செயலிகள், பதிவு செய்த பயனர்கள் தங்கள் கிரெடிட் ஸ்கோர் மற்றும் கிரெடிட் அறிக்கையை இலவசமாக பார்ப்பதற்கு அனுமதிக்கின்றன. உதாரணமாக, நீங்கள் மூன்றாம் தரப்பு கட்டணம், கிரெடிட் அல்லது ஏதேனும் ஃபின்டெக் செயலியில் பதிவு செய்திருந்தால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்களுக்குக் கிடைக்கும் இலவச கிரெடிட் ஸ்கோர் சரிபார்ப்பு வசதியை நீங்களும் கூட பெறலாம்.

இந்தியாவில் இருக்கும் கிரெடிட் ப்யூரோக்கள்

இந்தியாவில் பின்வரும் 4 ப்யூரோக்கள் உள்ளன – டிரான்ஸ் யூனியன் CIBIL, ஈக்விஃபேக்ஸ் (Equifax), எக்ஸ்பீரியன் (Experian) மற்றும் CRIF ஹை மார்க்

ஹை மார்க்: ஹை மார்க் என்பது MSME, வணிகம், சில்லறை வணிகம் மற்றும் விவசாயம் மற்றும் கிராமப்புறம் உள்ளிட்ட நுண்நிதி பிரிவுகளில் வலுவான இருப்பைக் கொண்ட ஒரு முழு சேவை கடன் தகவல் நிறுவனமாகும். இது 2007 இல் நிறுவப்பட்டது, அதற்குப் பிறகு இந்தியாவின் மிகப்பெரிய கடன் பணியக தரவுத்தளமாக மாறியுள்ளது. இதன் CRIF கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும்.

CIBIL (டிரான்ஸ் யூனியன் கடன் தகவல் பணியகம் (இந்தியா) லிமிடெட்.): டிரான்ஸ் யூனியன்n CIBIL என்பது இந்தியாவின் முதல் கடன் தகவல் நிறுவனங்களில் ஒன்றாகும், இது தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கான விரிவான கடன் அறிக்கையை வழங்கும் நான்கு பணியகங்களில் ஒன்றாகவும் உள்ளது. இதில் கிரெடிட் ஸ்கோர் அல்லது CIBIL ஸ்கோர் பிரபலமாக அறியப்படுகிறது, தனிநபர கடன்கள் அல்லது கிரெடிட் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்காக தங்கள் கிரெடிட் ஸ்கோரை மதிப்பிடவும் இது உதவுகிறது அதுமட்டுமின்றி விண்ணப்பதாரரின் சாத்தியமான அபாயங்களைக் கண்டறிவதற்கும், இது நிறுவனங்களுக்கு உதவுகிறது. இதன் CIBIL ஸ்கோர் 300 முதல் 900 வரை இருக்கும்.

எக்ஸ்பீரியன் (Experian): எக்ஸ்பீரியன் (Experian) என்பது ஒரு பன்னாட்டு கடன் அறிக்கை நிறுவனம் ஆகும், இது 2010 இல் இந்தியாவில் தன்னுடைய செயல்பாடுகளைத் தொடங்கியது. மற்ற நிறுவனங்கள் வழங்குவதைப் போலவே, எக்ஸ்பீரியன் (Experian)-ம் தனிப்பட்ட நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கும் வழங்குகிறது. எக்ஸ்பீரியன் (Experian) க்கான கிரெடிட் ஸ்கோர் 300 முதல் 850 வரை இருக்கும்.

ஈக்விஃபேக்ஸ் (Equifax): ஈக்விஃபேக்ஸ் (Equifax) இந்தியா என்பது இந்தியாவில் உள்ள ஒரு கடன் தகவல் நிறுவனமாகும் மேலும் ஈக்விஃபாக்ஸ் இன்க் இடையே ஒரு கூட்டு முயற்சியாகும். அமெரிக்கா மற்றும் இந்தியாவில் ஏழு முன்னணி நிதி நிறுவனங்கள் உள்ளன. இது கடன் வழங்குபவர்கள், நுகர்வோர் மற்றும் வணிகங்களுக்கு கடன் தொடர்பான சேவைகளை வழங்குகிறது.

இலட்சம் வரைக்குமான தனிநபர் கடனைப் பெறுங்கள்

எந்தவித தொந்திரவும் இல்லாத விண்ணப்ப செயல்முறை மற்றும் கவர்ச்சிகரமான வட்டி

உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை சரிபார்ப்பதற்கு என்னென்ன தேவை?

 

பான் எண்

 

வேலைவாய்ப்பு விவரங்கள்

 

தனிப்பட்ட தகவல்

 

கடன் அல்லது கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பித்தல்

கிரெடிட் ஸ்கோரின் வரம்புகள்

பெரும்பாலான கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சிகளுக்கான கிரெடிட் ஸ்கோர் வரம்பு 300 - 900 க்கு இடையில் உள்ளது. எடுத்துக்காட்டாக, CRIF மற்றும் CIBIL இந்த வரம்பைப் பின்பற்றுகிறது. 300 என்பது மிகக் குறைவானது மற்றும் 900 என்பது அதிக CIBIL மதிப்பெண்ணாகக் கருதப்படுகிறது.

சிறப்பானது

குறைந்த வட்டி விகிதத்துடன் கூடிய கடன்களுக்கான சிறந்த சலுகைகளைப் பெறுவதற்கு இது உதவுகிறது

மிகவும் நல்லது

இதுதான் சிறந்த ஸ்கொர்.

நல்லது

இதை வேகமாக மேம்படுத்தலாம்.

நியாயமானது

இது நல்ல ஸ்கோர் கிடையாது மேலும் இதை மேம்படுத்த வேண்டும்

சந்தேகத்திற்குரியது

இது நல்ல ஸ்கோர் கிடையாது மேலும் இதை மேம்படுத்த வேண்டும்

மோசமானது

இது நல்ல ஸ்கோர் கிடையாது மேலும் இதை மேம்படுத்த வேண்டும்

cibil-range

ஒரு நல்ல CIBIL ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோரை எப்படி பராமரிப்பது?

சிறந்த CIBIL ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் ஆனது, சிறந்த வட்டி விகிதத்தில் கடனை எளிதாகப் பெற உதவுகிறது. உதாரணத்திற்கு, SMFG இந்தியா கிரெடிட்டில், CIBIL ஸ்கோர் 750க்கு மேல் உள்ள விண்ணப்பங்களுக்கு அதிகமான தனிநபர் கடன் வட்டி விகிதங்களைநாங்கள் வழங்குகிறோம்.

சரியான நேரத்தில் பணம் செலுத்துவது உங்களுடைய CIBIL / கிரெடிட் ஸ்கோரை எப்போதும் நல்லபடியாக பராமரிப்பதற்கு உதவுகிறது. உங்களுடைய மாதாந்திர பில்களை சரியான நேரத்தில் செலுத்துங்கள் அல்லது தானாக பணம் ம் முறையைத் தேர்வு செய்து கொள்ளுங்கள். தாமதமாக பணம் செலுத்துதல் அல்லது தவறவிட்ட பணம் போன்றவை அந்தளவிற்கு நன்றாக இருக்காது, ஏனென்றால் இது உங்களுடைய கிரெடிட் ப்யூரோ அறிக்கையில் பிரதிபலிக்கிறது அதனால் இது உங்களுடைய ஸ்கோரை பாதிக்கிறது. இதேபோல, கிரெடிட் கார்டுகள் அல்லது தனிநபர் கடன்கள் போன்ற பல்வேறு கிரெடிட் பில்களஒ சரியான நேரத்தில் செலுத்துவதில் கவனமாக இருக்கும் விண்ணப்பதாரர்களின் கிரெடிட் ஸ்கோர் ஏற்றுக்கொள்ளக்கூடிய வரம்பை விட அதிகமாக இருப்பதைக் காணலாம். இல்லையென்றால், தற்போது நிறைய கடன்களைக் கொண்ட விண்ணப்பதாரர்கள் குறைந்த CIBIL அல்லது கிரெடிட் ஸ்கோரைப் பெறுவார்கள்.

உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எப்படி மேம்படுத்துவது?

உங்களிடம் நல்ல CIBIL ஸ்கோர் அல்லது கிரெடிட் ஸ்கோர் இல்லையென்றால், அதற்காக நீங்கள் கவலைப்பட தேவையில்லை. சில எளிய உதவிக்குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் அதை எப்போதும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மேம்படுத்தி விடலாம். ஒவ்வொரு நிதி பரிவர்த்தனையை சரியான நேரத்தில் செலுத்துவதும் மற்றும் நேர்மையாக இருப்பதன் மூலமும், அதிக ஸ்கோர்களைப் பெறுவதற்கான இறுதி திறவுகோலாகும்.

உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் மீது ஒரு கண் வைத்திருங்கள் - கிரெடிட் ஸ்கோரை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம், நீங்கள் சரியாக எங்கு இருக்கிறீர்கள் மற்றும் இன்னும் எந்தளவிற்கு முன்னேற்றம் தேவை என்பதைப் பற்றிய தெளிவான படத்தைப் பெறுவதற்கு இது உதவுகிறது.

கிரெடிட் ப்யூரோ அறிக்கையை ஆய்வு செய்யுங்கள் - உங்களுடைய கடன் அறிக்கையானது, உங்களின் முழு கடன் வரலாற்றைப் பற்றிய விரிவான ஆய்வைக் கொண்டுள்ளது. அதிக ஸ்கோரைப் பெறுவதற்கு ஏற்கனவே இருக்கும் பிழைகளைத் தெரிந்துகொண்டு திருத்திக்கொள்ள இது உதவுகிறது. இது ஸ்கோரைப் பாதிப்பதற்கு நேரம் எடுக்கும், ஆனால் இந்தத் தவறைச் சரிசெய்வதன் மூலம் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்தலாம்.

உங்கள் கடன் விண்ணப்பங்கள் / நிராகரிப்புகளை குறைந்தபட்சமாக வைத்திருங்கள் - அதிக கடன்களுக்கு விண்ணப்பித்தபிறகு அது நிராகரிக்கப்பட்டால் அதன் மூலமாக உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் குறைந்துவிடும். எந்தவொரு கடன் விண்ணப்பத்தையும் விண்ணப்பிப்பதற்கு முன்பு, நீங்கள் தகுதிக்கான அளவுகோலைச் சரிபார்த்துள்ளீர்களா என்பதை உறுதிசெய்து கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டின் பயன்பாட்டு வரம்பு - உங்களுடைய கிரெடிட் கார்டு பயன்பாடு வரம்பிற்குள் இருக்கிறதா என்பதை உறுதிசெய்யவும்.

*எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிெரடிட் ேகா. லி. விருப்பத்தின் பேரில்தான் கடன்கள் வழங்கப்படுகின்றன என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவும். இறுதி ஒப்புதலில், கடன் விண்ணப்பத்தின் போது கடனுக்கான விதிமுறைகள் மற்றும் பணம் கொடுப்பதற்கான செயல்முறை போன்றவை எல்லாம் எஸ்எம்எஃப்ஜி இந்தியா கிெரடிட் ேகா. லி. கொள்கைக்கு உட்பட்டதாக இருக்கும். நீங்கள் ஏற்கனவே எங்களுடைய வாடிக்கையாளராக இருந்தாலும் சரி, நீங்கள் உங்களுடைய கடனை முன்கூட்டியே அடைப்பதற்கு விரும்பினால், உங்களுடைய கடன் தொகைக்கான முன்பணம், விதிமுறைகள் மற்றும் கட்டணங்கள் போன்றவை எங்களுடைய கொள்கையின்படி அனைத்தும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவும்.

FAQs

பான் கார்டு மூலமாக CIBIL ஸ்கோரை எப்படி சரிபார்க்கலாம்?

படிவத்தில் கேட்கப்படும் போது உங்களுடைய பான் கார்டு விவரங்களை உள்ளிடவும். பான் கார்டுகள் நிதி வரலாற்றுடன் (ஹிஸ்டரியுடன்) தொடர்புடையதாக இருப்பதால், துல்லியமான CIBIL மதிப்பெண்ணைப் பெறுவதற்கு உதவுகிறது.

CIBIL ஸ்கோர் எவ்வளவு இருந்தால் சிறந்தது?

700 - 850க்கு மேல் உள்ள அனைத்தும் சிறந்த CIBIL ஸ்கோராகக் கருதப்படுகிறது.

CIBIL ஸ்கோருக்கும் கிரெடிட் ஸ்கோருக்கும் இடையே வித்தியாசம் எவ்வளவு?

இந்தியாவில் கிரெடிட் ஸ்கோர்களை, நான்கு கிரெடிட் ஏஜென்சிகள் மூலமாகப் பெறலாம். இவற்றில், CIBIL என்பது கிரெடிட் ஸ்கோரை வழங்கும் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாகும், இது CIBIL ஸ்கோர் என்று பிரபலமாக அறியப்படுகிறது.

Insurance disclaimer SMICC is registered with the Insurance Regulatory and Development Authority of India (IRDAI) as a Corporate Agent. IRDAI Registration No.: [CA0098] CIN No. U65191TN1994PLC079235. The insurance policy is a contract between the customer and the insurance company, and policy is underwritten by insurance companies. SMICC acts only as the distributor and is not responsible for any risk, policy issuance, claim settlement/repudiation etc. Insurance is the subject matter of solicitation. Purchase of insurance is voluntary and subject to insurer underwriting and policy terms and conditions. Customers are advised to read the policy terms and conditions, benefits, exclusions, claim settlement carefully before purchase. Kindly note that “Insurance Products” are not mandatory for the purpose of the application and disbursement of loan. It shall be the sole discretion of the customer, by providing explicit consent, to avail such insurance along with the Loan.
Beware of Spurious calls/ Fraud phone calls IRDAI is not involved in activities like selling Insurance policies, announcing bonus or investment of premium. Public receiving such phone calls are requested to lodge a police complaint.